சீனாவுடன் தொழில்நுட்ப உறவு தொடர்பில் டொனால்ட் ட்ரம்பை சந்தித்தார் சுந்தர் பிச்சை

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

கூகுள் தனது தொழில்நுட்பங்களை சீனாவிற்கு விரிவுபடுத்துவது தொடர்பில் நீண்டகாலமாக இழுபறி நிலையில் இருந்து வந்தது.

இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான சுந்தர் பிச்சை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினை சந்தித்தது ஆலோசித்துள்ளார்.

இந்த சந்திப்பு இடம்பெற்றதை டொனால்ட் ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற இச் சந்திப்பில் சீனாவுடனான அரசியல் பிரச்சினைகளையும் தாண்டி கூகுளை விரிவுபடுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இச்சந்திப்பு வெற்றிகரமாக முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்