மேலும் விஸ்தரிக்கப்பட்டது Apple Pay வசதி

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

ஆப்பிள் நிறுவனமானது தனது உற்பத்திகளை வாடிக்கையாளர்கள் இலகுவாக பெற்றுக்கொள்வதற்காக Apple Pay எனும் வசதியினை அறிமுகம் செய்திருந்தது.

இதன் ஊடாக மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தி கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும்.

எனினும் இவ் வசதியை குறிப்பிட்ட சில நாடுகளில் மாத்திரமே அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

அதன் பின்னர் படிப்படியாக ஏனைய நாடுகளிலும் விஸ்தரிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தற்போது ஜேர்மனியில் இவ் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இவ் வசதியினை ஜேர்மனியில் உள்ள Deutsche Bank, Hanseatic Bank, HypoVereinsbank, Edenred, Comdirect, Fidor Bank போன்ற வங்கிகளுடன் இணைந்தே ஆப்பிள் நிறுவனம் வழங்குகின்றது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers