வழமைக்கு மாறாக கறுப்பு நிறத்தில் கூகுளின் டூடுள்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

கூகுள் நிறுவனமானது தனது தேடல்பொறியில் மிகவும் வர்ணம் நிறைந்த டூடுல்களை ஒவ்வொரு தினங்களுக்கும் பிரசுரிக்கும்.

ஆனால் இன்றைய தினம் அமெரிக்காவிற்குரிய தனது தேடற்பொறியில் கறுப்பு நிறத்திலான டூடுலை பிரசுரித்துள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ்.ஹெச்.டபிள்யூ.புஷ் சில தினங்களுக்கு முன்னர் அவரது வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தியிருந்தார்.

எனவே அவருக்கு மரியாதை செலுத்தும் முகமாகவும், துக்க தினத்தை அனுஷ்டிக்கும் முகமாகவும் கூகுள் தனது டூடுலை கறுப்பு நிறத்திற்கு மாற்றியுள்ளது.

அமெரிக்காவின் 41 வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்த ஜோர்ஜ்.ஹெச்.டபிள்யூ.புஷ் இறக்கும்போது 94 வயதை எட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்