இதய நோய் வருவதை முன்கூடியே அறிந்துகொள்ளும் ஏ.ஐ.தொழில்நுட்பம்: அசத்தும் மைக்ரோசாஃப்ட்

Report Print Jayapradha in தொழில்நுட்பம்

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நோயாளிகளுக்கு இதய நோய் வரவிருப்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை மைக்ரோசாஃப்ட் வெளியிட்டுள்ளது

இன்று நமது ஸ்மார்ட்போன்களில் பல்வேறு வசதிகளை வழங்க செயற்கை நுண்ணறிவு, ஆக்மென்டெட் ரியாலிட்டி என்ற இரு தொழில்நுட்பங்களும் அவசியமானதாகவும், தவிர்க்க முடியாததாகவும் இருக்கின்றன.

அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மருத்துவ துறையில் பல்வேறு புதுமைகளை படைக்க துவங்கியிருக்கிறது.

மைக்ரோசாஃப்ட் அஸ்யூர் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த மென்பொருள் இந்தியர்களிடம் இதய நோய் வருவதற்கான ஆபத்தை மிகத்துல்லியமாக கண்டறியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இருதய நோய் சார்ந்த பல்வேறு மருத்துவ அறிக்கை விவரங்களை இணைத்து இந்த மென்பொருள் இயங்குகிறது.

மேலும் பாதிப்பு மிக அதிகமாகவோ, அதிகமாகவோ அல்லது துவக்க நிலையில் உள்ளதா என்பதையும் இந்த மென்பொருள் கணித்து வழங்குகிறது.

ஏ.ஐ. சார்ந்த ஏ.பி.ஐ. மூலம் அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் இதய துடிப்பு நோய் வருவதை முன்கூட்டிய கணிக்க முடியுமா என்று பரிசோதித்து வருகின்றனர்.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்