இலங்கை தமிழரான சுவிஸ் பாடகி ஒருவருக்கு கிடைத்துள்ள எதிர்பாராத பெரும் வாய்ப்பு!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
2903Shares

இலங்கை பெற்றோருக்கு சுவிட்சர்லாந்தில் பிறந்த பாடகியான ப்ரியா ரகுவுடன், அவரது பாடல்களை தன் இசைத்தட்டுக்களில் வெளியிடும் வகையில், பிரபல நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது.

ப்ரியா ரகுவின் பெற்றோர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். ப்ரியா சூரிச்சில் பிறந்தவர், அங்கேயே வாழ்ந்தும் வருகிறார். தமிழரான ப்ரியாவின் தந்தை, மேடைகளில் பாடல்கள் பாடுவதுடன், அருமையாக தபலா வாசிப்பாராம்.

இசை இரத்தத்திலேயே ஊறியிருக்க, ப்ரியாவும் அவரது சகோதரர் Japhna Gold என்பவருமாக பாடல்களை இயற்றி இசையமைத்து பாடத்தொடங்கியுள்ளார்கள். ப்ரியாவின் முதல் பாடலே பெரும் வரவேற்பைப் பெற, மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.

நான்கு பாடல்கள் மட்டுமே வெளியான நிலையில், இந்தியாவில் அவர்கள் எடுத்த பாடல் வீடியோ ஒன்று பெரும் வரவேற்பைப் பெற்று பெரிய தொலைக்காட்சிகள் சிலவற்றில் அதிக அளவில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

அப்படியிருக்கும் நிலையில்தான், ஒரு நாள் எதிர்பாராமல் திடீரென Warner Music UK நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்துள்ளது ப்ரியாவுக்கு.

எப்படி நடந்தது என்றே தெரியவில்லை, எல்லாம் விரைவாக நிகழ்ந்துவிட்டன என்கிறார் ப்ரியா.

Photo: Jenny Brough/Courtesy of Warner Music U.K.

இப்போது Warner Music UK நிறுவனம், ப்ரியாவின் பாடல்களை தன் இசைத்தட்டுக்களில் வெளியிடும் வகையில் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது.

ப்ரியாவின் வெற்றி, சமூக ஊடகங்கள் அதிகம் காணப்படும் இந்த சமூகத்தில் இசை ஆர்வம் கொண்ட மேலும் பலருக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

totalntertainment.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்