சுவிஸ் நகரை உலுக்கிய சரமாரி துப்பாக்கிச் சூடு! குடியிருப்பு கட்டிடத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம்: பொலிஸ் சிறப்பு நடவடிக்கை

Report Print Basu in சுவிற்சர்லாந்து
1938Shares

சுவிட்சர்லாந்தின் Biel நகரில் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Biel நகரில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து பொலிசார் சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.

சுமார் 5 முறை துப்பாக்கியால் சூடு சத்தம் கேட்டதாகவும், இரண்டு பேர் சாலையில சரிந்து கிடந்தை கண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் தகவல் அளித்துள்ளார்.

சாலையில் சரிந்த கிடந்தவர்களின் நிலை குறித்து தற்போது வரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை. சம்பவத்தை அடுத்து Biel நகரில் உள்ள Waffengasse தெரு மூடப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு தொடர்பில் ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை Lengnau பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் சடலம் ஒன்றை பொலிசார் கண்டுபிடித்தனர். இந்த சடலம் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவருடையதாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்