குறைந்த அளவே அறிகுறிகள் கொண்ட கொரோனா நோயாளிகள் தொடர்பில் ஒரு எச்சரிக்கை!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
481Shares

குறைந்த அளவே அறிகுறிகள் கொண்ட அல்லது அறிகுறிகளே காட்டாத கொரோனா நோயாளிகளுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என சுவிஸ் தொற்று நோயியல் நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

பேஸல் சுகாதாரத்துறையைச் சேர்ந்த Marcel Tanner என்னும் அந்த தொற்று நோயியல் நிபுணர் கூறும்போது, மோசமான அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் மட்டுமே நோயெதிர்ப்பு சக்தி ஏற்படுவதாக ஆய்வுகளின் ஆரம்ப கட்ட முடிவுகள் காட்டுகின்றன என்றார்.

ஆகவே, குறைந்த அளவே அறிகுறிகள் கொண்ட அல்லது அறிகுறிகளே காட்டாத கொரோனா நோயாளிகளுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார் Tanner.

தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்வது மற்றும் நோயாளியுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டுபிடிப்பது மற்றும் அதைத் தொடர்ந்து தனிமைப்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளை தொடர்வதன் அவசியத்தையே இந்த முடிவுகள் காட்டுகின்றன என்கிறார் அவர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்