கொரோனாவால் 8 நாட்கள் கோமாவில் படுத்திருந்த சுவிஸ் முதியவர் பூரண குணம்: அதிசயம் என உருகும் குடும்பம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் கொரோனாவால் 8 நாட்கள் கோமாவில் படுத்திருந்த முதியவர் ஒருவர் பூரண குணம் பெற்று குடியிருப்புக்கு திரும்பிய சம்பவம் பலருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸில் Ennetbürgen பகுதியை சேர்ந்தவர் 55 வயதான Raul Norinha. இவரே கொரோனாவால் பாதிக்கப்பட்டு, பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் 8 நாட்கள் கோமாவில் படுத்திருந்தவர்.

மார்ச் மாதம் துவக்கத்தில் ரவுல் நோரின்ஹாவுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டுள்ளது. அந்த சமயத்தில் இத்தாலிக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையே எல்லைகள் ஏதும் மூடப்படவில்லை.

மட்டுமின்றி குறைவான எண்ணிக்கையிலான கொரோனா நோயாளிகளே அப்போது சிகிச்சை பெற்றும் வந்துள்ளனர்.

மார்ச் முதல் வாரத்தில் காய்ச்சல் போன்ற அறிகுறிகளை அப்பா கவனித்தார் என கூறும் ரவுலின் மகள் சாரா,

அவருக்கு கடுமையான தலைவலி மற்றும் உடல் வலி ஏற்பட்டு ஒரு மருத்துவரை சந்திக்கச் சென்றார் என்கிறார்.

அந்த மருத்துவர் ஒரு பாக்டீரியா தொற்றுநோயைக் கண்டறிந்து, அவருக்கு antibiotics மருந்துகளை பரிந்துரைத்துள்ளார்.

ஆனால் ரவுல் மேலும் அவதிக்குள்ளானார். கடுமையான தலைவலி மற்றும் உடல் வலியுடன் தற்போது இருமலும் சேர்ந்ததால்,

குடும்பத்தார் அவரை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். ஏற்கெனவே ரவுல் நுரையீரல் நோயால் சிகிச்சை பெற்று வந்தவர் என்பதால் அபாய கட்டத்தில் இருக்கும் நோயாளிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.

மார்ச் 10 ஆம் திகதி ரவுல் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

திடீரென்று மார்ச் 15 ஆம் திகதி ரவுலின் உடல் நிலை கவலைக்கிடமானது. தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இதனிடையே மருத்துவ ரீதியான கோமாவுக்கும் மாற்றப்பட்டார். வேறு வழியில்லை காத்திருப்பதை தவிர என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

8 நாட்கள் கோமாவில் படுத்திருந்த ரவுல் திடீரென்று கண்கள் திறந்துள்ளார். கடந்த திங்களன்று மகள் சாராவிடம் வீடியோ அழைப்பு மூலம் ரவுல் பேசியுள்ளார். தற்போது 55 வயதான ரவுல் எழுந்து நடமாடுவதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் சாரா தெரிவித்துள்ளார்.

ரவுலின் சகோதரர்கள் உள்ளிட்ட மொத்த குடும்பமும் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் இருந்து வரும் நிலையில் ரவுல் மட்டும் குணமடைந்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்