வேடிக்கை பார்க்க வெளியே அனுப்பினேன்... ஆனால்? 13 வயது மகளால் தவிக்கும் சுவிஸ் தாயார்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் வேடிக்கை பார்க்க சென்ற சிறுமி விபத்தில் சிக்கி, தற்போது சிகிச்சை பலனின்றி இறந்துள்ளது அவரது குடும்பத்தை உலுக்கியுள்ளது.

பெர்ன் நகரில் அமைந்துள்ள டிராம்போலைன் அரங்கில் விபத்தில் சிக்கி, சிகிச்சை பலனின்றி மரணமடைந்த 13 வயது சிறுமி தொடர்பில் அவரது தாயார் உருக்கமான தகவலை வெளியிட்டுள்ளார்.

வேடிக்கை பார்க்க வெளியே அனுப்பி வைத்தேன், ஆனால் அவர் திரும்பி வரவே இல்லை என கண்கலங்கும் சிறுமியின் தாயார்,

நடப்பவற்றை எல்லாம் புரிந்துகொள்ளவே முடியவில்லை என தெரிவித்துள்ளார். டிராம்போலைன் அரங்கில் இருந்து ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு குறித்த சிறுமி சிகிச்சையில் இருந்து வந்தார்.

இனிமேலும் சிகிச்சை மேற்கொள்வது பலனைத் தராது என வியாழனன்று தெரிவித்துள்ள மருத்துவர்கள், சிறுமி மூளைச்சாவடைந்ததாக தெரிவித்துள்ளனர்.

அடுத்த நாள் பகலில், அவருக்கு அளிக்கப்பட்டு வந்த அவசர சிகிச்சைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

டிராம்போலைன் அரங்கில் பதிவான கமெரா காட்சிகளில், சிறுமி அசாதாரணமான அல்லது தைரியமான எதையும் செய்திருக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

மட்டுமின்றி, அவருடன் இருந்த தோழிக்கு, அந்த விபத்து நடந்தது குறித்து எந்த நினைவும் இல்லை என்றே கூறப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்