தவறான திசையில் காரில் பயணித்த முதியவர்... எட்டு கார்கள் சிக்கிய மூன்று விபத்துக்களை ஏற்படுத்திவிட்டு பலி!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் தவறான திசையில் முதியவர் ஒருவர் பயணித்ததால் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

பெர்னுக்கு அருகே 82 வயது முதியவர் ஒருவர் நெடுஞ்சாலையில் தவறான திசையில் பயணித்துள்ளார்.

அதனால் எட்டு வெவ்வேறு கார்கள் மோதி மூன்று விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதோடு, அவரது காரும் மற்ற கார்கள் நடுவே சிக்கிக்கொண்டுள்ளது. இந்த விபத்தில் அந்த முதியவர் பலியாகிவிட்டார்.

மேலும் இருவர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் முதியவர்களை கார் ஓட்ட அனுமதிப்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. உயிரிழந்த முதியவருக்கு ஒரு மகள் மட்டும் உள்ளார்.

அந்த மகளின் 18 வயது மகனும், இரண்டாண்டுகளுக்கு முன்பு கார் விபத்தொன்றில் பலியாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்