எங்களை முற்றாக கைவிட்டு விட்டார்கள்: சீனாவில் கலங்கும் சுவிஸ் மக்கள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சீனாவில் சிக்கித் தவிக்கும் சுவிஸ் குடிமக்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என அங்குள்ள சுவிஸ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

சுவிஸ் நிர்வாகத்திடம் இருந்து இதுவரை எந்த வகையிலும் தங்களை தொடர்புகொள்ளவில்லை என பெரும்பாலான மக்கள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் பீஜிங்கில் இருந்து சுவிட்சர்லாந்துக்கு பதிவு செய்யப்பட்ட விமான சேவைகள் மூன்று முறை ரத்து செய்யப்பட்டதாக கூறும் ஒருவர்,

கண்டிப்பாக சீனாவில் இருந்து வெளியேற வேண்டும், ஆனால் இந்த சூழலில் என்ன செய்வது என தெரியவில்லை என சீனாவின் சன்யா பகுதியில் குடியிருக்கும் சுவிஸ் நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சன்யா பகுதியில் இதுவரை 162 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நால்வர் இறந்துள்ளதாகவும் உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் சிக்கியுள்ள சுமார் 370 சுவிஸ் குடிமக்கள் சமூக வலைத்தளம் மூலம் தங்களுக்குள் தொடர்ந்து கருத்துப் பரிமாற்றம் செய்து வருகின்றனர்.

இதில் பெரும்பாலானோர் தங்களை இதுவரை சுவிஸ் நிர்வாகம் தொடர்புகொள்ளவில்லை என தெரிவித்துள்ளனர்.

ஆனால் சீனாவில் குடும்பமாக வசிக்கும் சில பேர் மட்டுமே அங்கிருந்து இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், எஞ்சியுள்ள 370 பேரும் தங்களை சுவிஸ் நிர்வாகம் முற்றாக கைவிட்டு விட்டதாக கலங்கியுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்