முதியவர்களைக் குறிவைத்து ஒரு மோசடி: சுவிஸ் பொலிஸ் எச்சரிக்கை!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் முதியவர்களைக் குறி வைத்து ஒரு புதிய மோசடி தொடங்கியிருப்பதால், கவனமாக இருக்கும்படி பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் Vaud பகுதியில் இந்த புதிய மோசடி நடப்பதாக தெரியவந்துள்ளது.

அதன்படி, முதியவர் ஒருவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது.

மறுமுனையில் பேசுபவர், தான் அந்த முதியவரின் நண்பர் அல்லது உறவினர் என தன்னை அறிமுகம் செய்துகொள்கிறார்.

தனக்கு அவசரமாக கொஞ்சம் பணம் தேவைப்படுவதாக கூறும் அந்த நபர், அந்த முதியவரை வங்கிக்கு வருமாறு அழைக்கிறார்.

பின்னர் அவரிடமிருந்து ஒருவர் பணத்தை வாங்கிக்கொண்டு செல்ல காத்திருப்பதாகவும் அவரிடம் பணத்தை கொடுக்குமாறும் அந்த முதியவருக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை இதுபோன்ற ஐந்து மோசடி முயற்சிகள் நடந்துள்ளதாக தெரிவிக்கும் பொலிசார், ஐந்துபேர் மட்டுமே தங்களிடம் புகாரளித்திருப்பதாகவும், வேறு எத்தனை பேர் ஏமாற்றப்பட்டார்களோ தெரியவில்லை என்றும் கவலை தெரிவித்துள்ளனர்.

ஆகவே, இப்படி ஒரு மோசடி நடப்பதால் விழிப்புடன் இருக்குமாறு பொலிசார் மக்களை எச்சரித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...