சுவிஸில் அகதி சிறார்கள் பலரை சீரழித்த வெளிநாட்டு நபர்: அம்பலமாகும் முழு பின்னணி

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் அகதி சிறார்களுக்கு மது மற்றும் போதை மருந்து தந்து சீரழித்த ஜேர்மானிய நாட்டவர் ஒருவரை பொலிசார் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு சம்பவம் நடக்கும்போது 15 முதல் 16 வயது இருக்கும் என புகாரில் கூறப்படுள்ளது.

தற்போது 33 வயதாகும் அந்த ஜேர்மானியர் தன்மீதான குற்றங்களை மறுத்துள்ளதுடன், இது பழிவாங்கும் செயல் எனவும் முறையிட்டுள்ளார்.

Olten-Gösgen மாவட்டத்தில் குடியிருக்கும் இவர், தமது குடியிருப்பில் பெரு விருந்துகளை வாடிக்கையாக ஏற்பாடு செய்து வருவதாகவும்,

அதில் மது மற்றும் போதை மருந்து பயன்பாட்டுடன், பாலியல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி, குறித்த காட்சிகளை இவர் பதிவு செய்வதாகவும் கூறப்படுகிறது. இந்த விருந்துகளில் பெரும்பாலும் இவரது நண்பர்களே கலந்து கொள்வதாகவும், அவர்களுக்காகவே சிறார்களை இவர் ஆசைவார்த்தை கூறி விருந்துகளில் கலந்துகொள்ள வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர் மீது கடந்த 2014 ஆம் ஆண்டு இதுபோன்றதொரு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனையும் அனுபவித்துள்ளார்.

மேலும் 2016 ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணைக் கைதியாக 5 வாரங்கள் சிறையிலும் இருந்துள்ளார்.

தற்போது குறித்த நபருக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பில் நிபுணர்களின் கருத்தை நீதிமன்றம் கோரியுள்ளது.

ஆனால் நீதிமன்றத்தின் அந்த கோரிக்கையையும் அவர் மறுத்துள்ளதுடன், நீண்ட காலமாக தாம் சிறை தண்டனை அனுபவித்துள்ளதாகவும், அதுவே தமக்கு சிகிச்சை தான் என தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் தீர்ப்பானது எதிர்வரும் டிசம்பர் 11 ஆம் திகதி அறிவிக்கப்படும் என மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்