சுவிஸ் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட முதியவர்: விசாரித்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிஸ் - ஜேர்மன் எல்லையில் முதியவர் ஒருவரிடம் இருந்து 600 ஹார்மோன் காப்ஸ்யூல்கள் பிடிபட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குறித்த நபரை போதை மருந்து கடத்தல் விவகாரத்தில் கைது செய்துள்ளதுடன், பிணை அனுமதிப்பதில் இருந்தும் விலக்கு அளித்துள்ளனர்.

Koblenz-Waldshut பகுதியில் செயல்பட்டுவரும் ஜேர்மன் சுங்க அதிகாரிகள் இதுவரை எல்லையை தாண்டுபவர்களிடம் இருந்து ஏராளமான கடத்தல் பொருட்களை மீட்டுள்ளனர்.

இந்த நிலையில், சூரிச் பகுதியை சேர்ந்த 85 வயது முதியவரை சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தி சோதனையிட்ட அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

குறித்த நபரிடம் இருந்து ஹார்மோன் காப்ஸ்யூல்கள் மற்றும் துப்பாக்கி ஒன்றையும் சுங்க அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.

Picture: Customs Germany

அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட 600 ஹார்மோன் காப்ஸ்யூல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரை போதை மருந்து கடத்திய வழக்கில் கைது செய்துள்ளனர்.

குறித்த ஹார்மோன் காப்ஸ்யூலானது உட்கொள்பவரின் உடலில் டெஸ்டோஸ்டிரோனாக மாற்றப்படும் என்பதால் இந்த வழக்கானது போதை மருந்து கடத்தல் பிரிவில் இணைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த 85 வயது சுவிஸ் நாட்டவர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்