ஓட்டுநர் உரிமம் பெற்ற இரண்டே மாதத்தில் விபத்து: இளைஞர் ஏற்படுத்திய இழப்பு!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

ஓட்டுநர் உரிமம் பெற்ற இரண்டே மாதத்தில் இளைஞர் ஒருவர் ஏற்படுத்திய விபத்தால் 50,000 ஃப்ராங்குகள் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Aargau மாகாணத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் ஓட்டுநர் உரிமம் பெற்ற ஒருவர் தனது நண்பர்கள் மூவருடன் காரில் பயணம் செய்துள்ளார்.

அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அவரது கார் ஒரு விலையுயர்ந்த காரில் சென்று மோதியுள்ளது.

விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றாலும், அவர்கள் மோதிய Porsche Macan காருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

அந்த காருக்கு ஏற்பட்ட இழப்பு 50,000 ஃப்ராங்குகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்