சுவிட்சர்லாந்தில் காருக்குள் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றவாளி வைத்த முக்கிய கோரிக்கை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் துப்பாக்கியால் உறவினரை கொன்ற வழக்கில் சிறையில் இருக்கும் நபர் தம்மை விடுவிக்க வலியுறுத்தியுள்ளார்.

சமூகத்திற்கு ஆபத்து விளைவிக்க கூடும் என்ற காரணத்தால் குறித்த நபரை தற்போது நீதிமன்ற கண்காணிப்பில் உள்ள காப்பகம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே 69 வயதான தம்மை விடுவிக்க வேண்டும் எனவும் தாம் வயதான விவசாயிகளுக்கான இல்லத்தில் குடியேற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தம்மால் இனி சமுதாயத்திற்கு எந்த தீங்கும் ஏற்பட வாய்ப்பில்லை எனவும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவரது கோரிக்,கை மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், சிறார் மற்றும் வயது வந்தோர் பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் அறிக்கை கேட்டுள்ளனர்.

கடந்த 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் Madiswil பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் பெண் ஒருவர் தமது சொந்த உறவினரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவரது சடலமானது 5 நாட்களுக்கு பின்னர் அவரின் காருக்குள் இருந்து பொலிசாரால் மீட்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் நீதிமன்றம் மூலம் அவருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை வாங்கித் தந்தனர்.

ஆனால் 2017 ஆம் ஆண்டு இவரது விடுதலை குறித்து ஆய்வுக்கு உட்படுத்திய அதிகாரிகள் தரப்பு, தண்டனை காலத்தை நீட்டித்தது.

சமூகத்திற்கு இவரால் ஆபத்து நேரலாம் என்ற காரணத்தாலையே இந்த தண்டனை நீட்டிப்பு நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

விசாரணை காலகட்டத்தில் தமது செயலை ஒப்புக்கொள்ள மறுத்த இவர், டி.என்.ஏ மற்றும் இவர் பயன்படுத்திய துப்பாக்கியில் பதிவாகியிருந்த விரல் அடையாளங்களை ஆய்வுக்கு உட்படுத்தியே குற்றவாளி இவர் என விசாரணை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்