லுசேர்ன் மாநிலத்தில் வெகுசிறப்பாக நடைபெற்ற துர்க்கை அம்மன் ஆலயத்தின் 22ஆவது ஆண்டு வாணி விழா

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

லுசேர்ன் மாநிலத்தின் Pfarreizentrum, St. Garli மண்டபத்தில் நேற்றைய தினம் துர்க்கை அம்மன் ஆலயத்தின் 22ஆவது ஆண்டு வாணி விழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

முதல் நிகழ்வாக மங்கள விளக்கை திரு திருமதி கலையழகன் குடும்பத்தினர் ஏற்றினார்கள்.

அதனை தொடர்ந்து துர்க்கை அம்மன் ஆலய பிரதமகுரு நகுலேஸ்வர குருக்களால் பூசை நடைபெற்று ஆசியுரையுடன் நிகழ்வுகள் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து மங்கள விளக்கினை தமிழ்மன்ற தலைவர் திரு தர்மபாலன் அவர்களும் சுவிஸ் தமிழர் புனர்வாழ்வு கழக இயக்குனர் திரு சண்முகதாசன் அவர்களும் பொதுச்சுடரேற்றலை சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு லுட்சேர்ன் மாநில பொறுப்பாளர் ஏற்றி வைத்து அகவணக்கம், பிரசாதம் வழங்கல், வரவேற்புரை, ஆசியுரையுடன், இசைநிகழ்வுகள் இடம்பெற்றன.

செவிக்கு இனிமையான பக்தி காணங்களை கர்ணன் இசைக்குழுவினரால் பாடப்பட்டன. நடன ஆசிரியர்களாக மங்களநாயகி வசந்தகுமார் (சலங்கை நர்தனாலயம்), நிமலினி ஜெயக்குமார் (திருக்கோவில் ஆடல் கலையகம்), பிரௌவியா சிவாஜி (ஓம் சர்வேஸ்வர நாட்டியாலயம்), ஞானசுந்தரி வாசன் (ராதா நடனலயம்), ஜெயராணி கோணேஸ் (சக்திலயா பள்ளி), காயத்திரி திசாந்தன் (பாரததர்சனா நடனாலயம்) ஆகியோரின் மாணவர்களின் நடனங்கள் கண்களுக்கு இதமான இருந்தன.

மற்றும் சாயகி டிபர்ஷன் எனும் சிறுமியின் நவராத்திரி என்ற தலைப்பில் ஆற்றிய பேச்சை மழழைக்குரலில் கேட்க மிகவும் அருமையாக இருந்தது.சங்கீத ஆசிரியை திருமதி சதீஸ் அவர்களின் சங்கீதமும் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் முதல் முறையாக துர்க்கை அம்மன் ஆலய மகளீரால் வில்லுப்பாட்டு இசைக்கப்பட்டது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த ஒரு நிகழ்வாக இருந்ததை பார்க்க முடிந்தது.

செவிக்கு இனிமையான நாதஸ்வர இசைக்கச்சேரி கலைச்செல்வன் குழுவினரால் இசைக்கப்பட்டது. சிவருசி திரு தர்மலிங்கம் சசிக்குமார் அவர்களால் (சிவன் கோவில் Bern) சிறப்புரை ஆற்றப்பட்டது.

அவ்வுரையானது சிறுவர்கள், பெற்றோர்கள் மற்றும் அனைவரையும் சிந்திக்கக்கூடியதாகவும் புலம்பெயர் வாழ்வின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு மிகவும் உந்துதலை தரக்கூடியதாகவும் அமைந்தது.

இறுதியாக நன்றி உரையுடன் இனிதே நிகழ்வுகள் நிறைவடைந்துள்ளன.இந்த நிகழ்வுகள் யாவையும் இனிதே ஒழுங்கமைத்த தமிழ் மன்றம் லுசேர்ன், STRO, ஆசிரியர்கள் மற்றும் அனவைருக்கும் எமது நன்றியை தெரிவித்துக் கொள்வதில் மிகவும் மகிழ்வடைகின்றோம்.

இனிவரும் காலங்களிலும் இந்த நிகழ்வு தொடர அனைவரினதும் ஒத்துழைப்பும், ஒற்றுமையும் எதிர்ப்பார்க்கின்றோம்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers