கண்களைக் கட்டிக்கொண்டு வாளால் வாத்தின் தலையைக் கொய்த பெண்மணி: காரணம் இதுதான்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் கண்களைக் கட்டிக்கொண்டு ஒரு பெண் வாத்து ஒன்றின் தலையைக் கொய்தார்.

1920ஆம் ஆண்டுக்குப்பின், ஒரு பெண் கண்களைக் கட்டிக்கொண்டு மிகச் சரியாக வாத்து ஒன்றின் தலையைக் கொய்வது இதுதான் முதல் முறையாகும்.

இது எதற்காக என்றால், கோடைக்காலம் முடிவுக்கு வருவதைக் குறிப்பதற்காக, சுவிட்சர்லாந்தில் இவ்வாறு செய்யப்படுவது பாரம்பரியமாகும்.

ஆனால் அதன் பின்னணியில் உள்ள கதை என்னவென்று தெரியவில்லை. Lucerne மாகாணத்தில் இந்த பாரம்பரியம் பின்பற்றப்பட்டு வருகிறது.

புனித மார்ட்டின் தினத்தன்று, இளைஞர்களும் இளம்பெண்களும், கட்டித்தொங்க விடப்பட்டிருக்கும் ஏற்கனவே கொல்லப்பட்ட வாத்து ஒன்றின் தலையை, கண்களைக் கட்டிக்கொண்டு வெட்ட முயற்சி செய்வார்கள்.

இம்முறை 92 ஆண்களும் 5 பெண்களும் தங்கள் அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்ப்பதற்காக தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தார்கள்.

யார் சரியாக அந்த வாத்தின் தலையைக் கொய்கிறார்களோ, அவர்கள் அதைக் கொண்டு சென்று விருந்து செய்து உண்டு மகிழலாம்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்