கைப்பந்து அணி போல் சீருடை அணிந்து சுவிட்சர்லாந்துக்குள் நுழைய முயன்ற புலம்பெயர்வோர்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

கைப்பந்து அணி போல் சீருடை அணிந்து சுவிட்சர்லாந்துக்குள் நுழைய முயன்ற புலம்பெயர்வோர் பத்துபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பத்து சிரிய புலம்பெயர்வோர் ஒரே மாதிரி சீருடை அணிந்து கைப்பந்து அணியினர் (volley ball) போல் ஏமாற்றி சூரிச்சுக்கு செல்ல முயன்றபோது, ஏதென்ஸ் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

தங்கள் சீருடை எல்லையை தாண்ட தங்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையில் புறப்பட்ட பத்துபேரும், இரண்டு கைப்பந்துகளை கையில் வைத்திருந்த நிலையிலும், அடையாள சோதனையின்போது சிக்கினர்.

கிரீஸ் நாட்டிற்குள் சட்ட விரோதமாக நுழைந்த அந்த பத்துபேரின் ஆவணங்களும் போலியானவை என்று தெரியவந்ததையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் உக்ரைன் பாஸ்போர்ட்டுகளை வைத்திருந்ததாக தெரிகிறது.

சமீபத்தைய அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, 26,000கும் அதிகமான புகலிட கோரிக்கையாளர்கள் Lesbos, Chios மற்றும் Samos ஆகிய கிரீஸ் தீவுகளில் முகாம்களில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்