14 வயது சுவிஸ் சிறுமிக்கு ஏற்பட்ட துயரம்: 6 ஆண்டுகளுக்கு பின்னர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் 14 வயது சிறுமிக்கு போதை மருந்து அளித்து சீரழித்த வழக்கில் 64 வயது நபருக்கு அபராதமும் சிறை தண்டனையும் அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கிய வழக்கில் தற்போது 70 வயதாகும் நபருக்கு 34 மாத சிறை தண்டனையும் சிறுமிக்கு 15,000 பிராங்குகள் இழப்பீடு வழங்கவும் சூரிச் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த இச்சம்பவத்தில் Dietikon மாவட்ட நீதிமன்றமானது, இவருக்கு நிபந்தனையுடன் கூடிய 2 ஆண்டு சிறை தண்டனையும், 12,000 பிராங்குகள் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பம் மேற்கொண்ட மேல்முறையீட்டில், சூரிச் நீதிமன்றம், தண்டனை காலத்தை 34 மாதங்களாக அதிகரித்ததுடன், சிறுமிக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையை 15,000 பிராங்குகளாகவும் உயர்த்தியது.

தற்போது 70 வயதாகும் இவர் வெளிநாட்டில் குடியிருப்பதாகவும், உடல் நிலை பாதித்துள்ளதாகவும் கூறி தம்மால் நீதிமன்ற விசாரணைக்கு நேரில் கலந்துகொள்ள முடியாது எனவும் தெரிவித்து வழக்குரைஞர் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் அவர் முன்னரே நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்