சுவிட்சர்லாந்தில் வேலை கிடைக்காத நபர் மேற்கொண்ட அதிரடி!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் வேலை கேட்டு ஒவ்வொரு நிறுவனமாக விண்ணப்பித்தும், பலனேதும் இல்லாததால், அதிரடியாக சாலையில் இறங்கினார் ஒருவர்!

Thurgau மாகாணத்திலுள்ள Frauenfeld நகரில் வேலைக்கு விண்ணப்பித்து பலன் ஏதும் இல்லாததால், Stephan Künzer (42) சாலையில் இறங்க முடிவு செய்தார்.

சூரிச்சுக்கு செல்லும் நெடுஞ்சாலை ஒன்றில் ‘வேலை தேவை’ என்று எழுதி, தனது மொபைல் எண்ணையும் குறிப்பிட்ட அட்டை ஒன்றை ஏந்தி நின்றார் அவர்.

கடந்த சில ஆண்டுகளாக விண்ணப்பித்ததை விட தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளதாக தெரிவிக்கும் Stephan Künzer, தற்போது தனக்கு ஒரு வேலை கிடைத்துள்ளதாகவும், என்றாலும் அது குறுகிய கால வேலைதான் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேபோல் பீனிக்சை சேர்ந்த ஒருவர் சாலையில் இறங்கி, வேலை தேவை என்று எழுதிய அட்டை ஒன்றுடன் நின்றதும், அவருக்கு ஏராளமான ஆஃபர்கள் வந்ததும் நினைவிருக்கலாம்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்