வெளிநாட்டில் உடல் நசுங்கி மரணமடைந்த சுவிஸ் இளம் பெண்: பதற வைக்கும் புகைப்படங்கள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
375Shares

தெற்கு ஸ்பெயினில் உள்ள San Roque பகுதியில் நடந்த சாலை விபத்தில் சிக்கி சுவிஸ் இளம் பெண் ஒருவர் பரிதாபமாக கொல்லப்பட்ட சம்பவம் வெளியாகியுள்ளது.

சம்பவத்தின்போது மூன்று பெண்கள் இணைந்து Audi A3 வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது எதிரே வந்த Range Rover வாகனம் மீது பலமாக மோதியுள்ளது. இதில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த சுவிஸ் பெண்மணி உடல் நசுங்கி பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக முன் இருக்கையில் அமர்ந்திருந்த இரு பெண்களும் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கொல்லப்பட்ட சுவிஸ் பெண்மணியை, விபத்தில் சிக்கிய வாகனத்தை பிளந்து சடலத்தை வெளியே மீட்டுள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய ரேஞ்ச் ரோவர் வாகனமானது சம்பவப் பகுதியில் இருந்து சுமார் 100 மீற்றர் தள்ளியே நிறுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் தகவல் அறிந்து அதிகாரிகள் சம்பவப்பகுதிக்கு விரையும் முன்னர் அந்த வாகன சாரதி மாயமானதகா தெரிய வந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பில் ஸ்பானிய பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

கொல்லப்பட்ட சுவிஸ் பெண் தொடர்பில் மேலதிக தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்