மனைவியை கொலை செய்த கணவன்: கௌரவக்கொலைக்கு அஞ்சியிருக்கும் குடும்பம்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

கிழக்கு சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஒரு அல்பேனிய குடும்பம், தாங்கள் கௌரவக்கொலை செய்யப்படலாம் என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகிறது. அந்த குடும்பத்தில் 34 வயது பெண் ஒருவர், அவரது கணவரால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

அந்த 37 வயது நபர் தற்போது சிறையில் இருக்கிறார். இந்த நேரத்தில் அந்த பெண்ணின் குடும்பத்தார் தங்களை கௌரவக்கொலை செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் அந்த ஆணின் குடும்பத்தார் வாழ்ந்து வருகிறார்கள்.

அல்பேனியாவைப் பொருத்தவரையில், கௌரவக்கொலை என்பது ஆண்டாண்டு காலமாக பாரம்பரியமாக நடந்து வரும் ஒரு விடயமாகும்.

இன்று வரையில் அங்கு கௌரவக்கொலை ஒரு பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. அல்பேனிய பாரம்பரியத்தின்படி, கௌரவம் என்பது அல்பேனிய சட்டங்கள் மற்றும் மரபின் நான்கு தூண்களில் ஒன்றாகும்.

குடும்ப கௌரவத்திற்கு இழுக்கை ஏற்படுத்துவோரை குடும்பத்தாரே கொலை செய்துவிடுவார்கள்.

தற்போது கொலை செய்த நபரின் குடும்பத்தாரில் ஒருவர், கொலை சுவிட்சர்லாந்தில் நடந்திருந்தாலும்கூட, அந்த பெண்ணின் குடும்பத்தார் தங்களை சும்மா விட மாட்டார்கள் என்கிறார்.

உயிரிழந்த நபர் தொடர்பான எந்த தகவலையும் வெளியிடாத பொலிசார், அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று மட்டுமே தெரிவித்தனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்