சுவிட்சர்லாந்தின் மிக அழகான கிராமம் எது தெரியுமா? வெளியான தகவல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் உள்ள Trub என்ற கிராமமே இந்த ஆண்டின் மிக அழகான கிராமம் என்ற விருத்துக்கு தெரிவாகியுள்ளது.

எதிர்வரும் கிராம விழாவின் போது இந்த விருது தொடர்பான கொண்டாட்டங்களையும் சிறப்பிக்க வேண்டும் என நகரத் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Trub கிராமத்தில் மொத்தம் 1350 மக்கள் குடியிருந்து வருகின்றனர். இங்கு 140 பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன.

மட்டுமின்றி இங்குள்ள எழில் கொஞ்சும் இயற்கை சூழலே இந்த விருதுக்கு தெரிவாக முக்கிய காரணம் என நகரத்தலைவர் Peter Aeschlimann பெருமை பொங்க தெரிவித்துள்ளார்.

மேலும் எஞ்சிய 11 கிராமங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு Trub கிராமம் விருதை தட்டிச் செல்ல வேண்டும் என்றால், அதன் பெருமையை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விருதால் சுற்றுலா மற்றும் உள்ளூர் தொழில்துறை வளர்ச்சி அடையும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மிக விரைவில் சிறப்பு விழா ஒன்றில் வைத்து இந்த விருது தொடர்பில் அறிவிக்க உள்ளதாகவும், ஆனால் பொதுமக்கள் தமது கிராமம் தொடர்பில் நல்ல கருத்துகளை பகிர்ந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்