ஆகஸ்டு முதல் திகதிக்கு முன்னர் பிள்ளை பெற்றுக் கொள்ள ஆசைப்படும் ஜெனீவா மக்கள்: காரணம் இதுதான்!

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரத்து பெண்கள் ஆகஸ்டு முதல் திகதிக்கு முன்னர் பிள்ளை பெற்றுக்கொள்ள ஆசைப் படுவதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஜெனீவா நகர நிர்வாகத்தை பொறுத்தமட்டில், ஒரு பிள்ளை மழலையர் பாடசாலைக்கு இந்த ஆண்டு செல்ல வேண்டுமா அல்லது அடுத்த ஆண்டா என்பதை முடிவு செய்வதற்கான கடைசி நாளாகும் ஆகஸ்டு முதல் திகதி.

இளம் தாயார் ஒருவர் இந்த விவகாரம் தொடர்பில் நல்ல புரிதல் கொண்டவர் என்பதால், தமது மருத்துவரிடம் ஆகஸ்டு முதல் திகதிக்கு முன்னர் பிள்ளை பெற்றெடுக்க ஏதேனும் வாய்ப்பு உள்ளதா என வினவியுள்ளார்.

இருப்பினும் அவருக்கு ஆகஸ்டு 11 ஆம் திகதியே பிள்ளை பிறந்துள்ளது. மருத்துவ அவசரங்களால் மட்டுமே பிரசவத்தை முன்கூட்டியே நடத்த முடியும் எனவும் மருத்துவர்கள் அவருக்கு எடுத்துக் கூறியுள்ளனர்.

ஆனாலும், அவர் ஆகஸ்டு முதல் திகதிக்கு முன்னரே தமக்கு பிரசவ வலி ஏற்படுவதற்காக காரமான உணவுகளை எடுத்துக் கொண்டார்.

அதுவும் அவருக்கு உதவில்லை. ஆகஸ்டு 11 ஆம் திகதி அவருக்கு பிள்ளை பிறந்துள்ளதால், தற்போது 2020 ல் மட்டுமே அவரால் தமது பிள்ளையை மழலையர் பாடசாலைக்கு அனுப்ப முடியும்.

இதனால் அவரது பாடசாலையில் தமது மகன் மட்டுமே வயது முதிர்ந்தவராக இருப்பார் என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா நகரத்து இளம் தாயாருக்கு தற்போது இந்த விவகாரம் தலைவலியை கொடுத்துள்ளது. திட்டமிட்டு கருவுற்றாலும் சில வேளையில் இது போன்று சிக்கல் ஏற்படுவதாகவும்,

இதற்கு இடைக்கால தீர்வு ஒன்று கண்டிப்பாக வேண்டும் எனவும் இளம் தாய்மார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்