ஐந்து வயது சிறுமிக்கு 90 பவுண்டுகள் அபராதம் விதித்த பயணச்சீட்டு பரிசோதகர்: அவர் செய்தது சரியா?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் 6 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு பயணச்சீட்டு தேவை இல்லை என்னும் சட்டம் அமுலில் இருக்கையில், பயணச்சீட்டு இன்றி பயணித்த ஒரு ஐந்து வயது சிறுமிக்கு பயணச்சீட்டு பரிசோதகர் ஒருவர் அபராதம் விதித்துள்ளார்.

அத்துடன் அவர் செய்தது சரிதான் என போக்குவரத்து நிறுவனமும் கூறியுள்ளது. பயணச்சீட்டு இல்லாமல் பேருந்தில் பயணித்த ஒரு ஐந்து வயது சிறுமிக்கு, 90 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டது.

அந்த சிறுமி தனது பத்து வயது சகோதரியுடன் பேருந்தில் பயணித்தார்.

சுவிட்சர்லாந்தில் 6 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு பயணச்சீட்டு தேவை இல்லாத பட்சத்திலும் பயணச்சீட்டு பரிசோதகர் அவளுக்கு அபராதம் விதித்தார்.

அதற்கு காரணம் என்னவென்றால், ஆறு வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பயணச்சீட்டு தேவையில்லைதான், ஆனால், ஆறு வயதுக்கு கீழ் உள்ளவர்கள் குறைந்தபட்சம் 12 வயதுடையவர்களுடன் பயணிக்க வேண்டும்.

எனவேதான் தனது 10 வயது சகோதரியுடன் பயணித்த அந்த சிறுமிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பேருந்து நிறுவனம் தான் விதிகளுக்குட்பட்டே செயல்பட்டதாக தெரிவித்தது.

பின்னர் சிறுமிக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை 42 பவுண்டுகளாக (50 சுவிஸ் ஃப்ராங்குகள்) குறைத்துள்ள போக்குவரத்து நிறுவனம், பயணச்சீட்டு பரிசோதகர் செய்தது சரிதான் என கூறியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers