சுவிட்சர்லாந்தில் பெருவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட காரில் இருந்த இருவரின் நிலை என்ன?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் திடீர் மழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரில் இருந்த ஆண் ஒருவரும் சிறுமி ஒருவரும் உயிருடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவே என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வலாயிஸ் பகுதியில் ஞாயிற்றுக் கிழமை ஏற்பட்ட புயல் மழையை அடுத்து ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி, கார் ஒன்றிலிருந்த 37 வயதுள்ள ஆண் ஒருவரும், ஆறு வயது சிறுமி ஒருவரும் அடித்துச் செல்லப்பட்டனர்.

அந்த ஆண் ஜெனீவாவைச் சேர்ந்தவர், அந்த சிறுமி பிரான்சைச் சேர்ந்தவர். உண்மையில் இரண்டு கார்கள் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன, அவற்றில் ஒன்றில் ஆட்கள் யாரும் இல்லை.

ஆட்கள் இல்லாத அந்த கார் திங்களன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அந்த ஆணும் சிறுமியும் இருந்த கார் கிடைக்கவில்லை.

சுமார் 70 பேர் அந்த இருவரையும் தேடும் முயற்சியில் ஈடுபட்ட நிலையிலும், அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் பெருவெள்ளத்தின் உக்கிரத்தைக் காணலாம். தண்ணீர் மட்டுமல்லாது, சேறும் குப்பைகளுமாக சேர்ந்து பேரிரைச்சலுடன் முரட்டுத்தனமாக பாய்ந்தோடுவதை காண முடிகிறது.

இந்நிலையில், காணாமல் போன அந்த ஆணையும் சிறுமியையும் இனி உயிருடன் மீட்பது கடினமே என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers