சுவிட்சர்லாந்தில் ஒரே நேரத்தில் தீக்கிரையான 30 வாகனங்கள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் துர்காவ் மண்டலத்தில் ஒரே நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் 30 எண்ணம் தீக்கிரையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துர்காவ் மண்டலத்தின் Sirnach பகுதியிலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சனிக்கிழமை பகல் 2.15 மணியளவில் அப்பகுதியில் குடியிருக்கும் நபர் ஒருவரே மண்டல அவசரப் பிரிவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

உடனடியாக சம்பவப்பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர், போராடி நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

ஆனால் இச்சம்பவத்தால் மொத்தம் 30 கார்கள் தீக்கிரையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீ விபத்து ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்