சுவிஸ் தேசிய தினத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட நபர்: இருவர் கைது... சாட்சிகளை தேடும் பொலிஸ்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் உணவக விடுதி ஒன்றில் ஏற்பட்ட மோதலில் நபர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளானவர் தொலைக்காட்சி பிரபலத்தின் உறவினர் என கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் இருவரை கைது செய்துள்ளனர்.

சூரிச் மண்டலத்தின் 4-வது வட்டத்தில் தேசிய தினத்தன்று இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதில் 41 வயதான நபர் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் பொலிசாரால் மீட்கபட்டார். சம்பவயிடத்திலேயே 22 மற்றும் 34 வயதுடைய இருவரை பொலிசார் இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்துள்ளனர்.

மீட்கப்பட்ட நபர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர் தொலைக்காட்சி பிரபலம் மியாவின் உறவினர் என்பதால்,

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காயமடைந்தவரின் புகைப்படத்தை அவரே பதிவேற்றி, சாட்சிகள் முன்வந்து பொலிசாருக்கு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

உணவு விடுதியில் கத்தியால் தாக்குதலுக்கு உள்ளாகும் காரணம் என்ன என்பது தொடர்பில் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பில் சாட்சிகள் முன்வந்து தகவல் அளிக்கவும் பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்