தீ பற்றி எரிகிறது என்று நினைத்து தீயணைப்பு வீரர்களை அழைத்த பெண்ணுக்கு, விழாக்கோலம் என்று எடுத்துரைத்துள்ளனர் அவ்வீரர்கள்.
ஜேர்மனியிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு சமீபத்தில்தான் குடிபெயர்ந்த ஒரு பெண், தனது வீட்டிலிருந்து பார்க்கும்போது, காட்டில் தீப்பற்றி எரிவதைக் கண்டுள்ளார்.
உடனடியாக அவர் தீயணைப்புப் படையினரை அழைக்க, அவர்கள் எந்த இடத்தில் தீப்பிடித்து எரிகிறது என்பதை சரியாக கூறமுடியுமா என்று கேட்டிருக்கிறார்கள்.
ஆனால் அந்த பெண்ணால் அந்த இடத்தை சரியாக அடையாளம் கூறமுடியவில்லை. என்றாலும் உடனடியாக அந்த பெண் குறிப்பிட்ட இடத்திற்கு, குத்து மதிப்பாக தீயணைப்பு இயந்திரங்களுடன் தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர்.
ஆனால் அங்கு சென்ற வீரர்கள், Birmenstorf என்ற இடத்தில், பண்டிகை ஒன்றைக் கொண்டாடுவதற்காக மக்கள் கூடி bonfire என்னும் நெருப்பு மூட்டியிருந்ததைக் கண்டு ஏமாற்றத்துடன் திரும்பியிருக்கின்றனர்.
ஜேர்மனியிலிருந்து சமீபத்தில்தான் அந்த பெண் சுவிட்சர்லாந்துக்கு குடிபெயர்ந்துள்ளதால், அவருக்கு அந்த பண்டிகை குறித்து தெரியாமல் இருந்துள்ளது.
எனவே அந்த பெண்ணை சந்தித்த தீயணைப்பு வீரர்கள், அந்த விழா குறித்து விளக்கியிருக்கிறார்கள்.
இறுதியாக, இனிமேல் இந்த மாதிரி விடயத்திற்கெல்லாம் தங்களை அழைக்க வேண்டாம் என அவர்கள் அந்த பெண்ணை கேட்டுக் கொண்டார்கள்.