வெளிநாட்டில் கோர விபத்தில் சிக்கிய சுவிஸ் இளைஞர்கள்: பதறவைக்கும் புகைப்படங்கள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

செர்பியா நாட்டு எல்லையில் நடந்த கோர சாலை விபத்தில் சிக்கிய இரண்டு சுவிஸ் இளைஞர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

அவர் சென்ற வாகனம் மொத்தமாக தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் வெளியான புகைப்படங்கள் பார்ப்பவர்களை பதற வைத்துள்ளது.

சுவிஸ் இளைஞர்கள் இருவர் விடுமுறையை கழிக்க செர்பியா நாட்டுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் குரோசியா நாட்டில் உள்ள செர்பியா எல்லையில் கோர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் லேசான காயங்களுடன் சாரதியும் அவருடன் பயணித்த இளைஞரும் உயிர் தப்பியுள்ளனர். ஆனால் அவர்கள் பயணித்த வாகனமானது தீப்பிடித்து எரிந்து சாம்பலாகியுள்ளது.

அதிக வேகத்தில் எதிரே சென்ற வாகனத்தை முந்தும் முயற்சியில் கட்டுப்பாட்டை இழந்த சுவிஸ் இளைஞர்களின் வாகனம் விபத்தில் சிக்கியதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றன.

தக்க சமயத்தில் சம்பவப்பகுதிக்கு சென்ற மீட்பு குழுவினர்கள், வாகனத்தில் சிக்கிய இரு இளைஞர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் 28 வயதான சுவிஸ் இளைஞர் ஒருவர் செர்பியாவுக்கு சுற்றுலா சென்ற நிலையில்,

குரோசியா எல்லையில் சந்தித்த ஜேர்மானியருடன் கார் பந்தையத்தில் ஈடுபட்டுள்ளார். தகவல் அறிந்த குரோசியா பொலிசார் மணிக்கு 228 கி.மீ வேகத்தில் பறந்த சுவிஸ் மற்றும் ஜேர்மானிய இளைஞர்களை மடக்கியதுடன், தலா 2200 பிராங்குகள் அபராதமும் விதித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்