அதிக அளவில் குவியும் இந்திய, சீன சுற்றுலாப்பயணிகள்: ஐரோப்பியர்களுக்கு சலுகை வழங்கும் சுவிட்சர்லாந்து?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் அதிக அளவில் இந்திய மற்றும் சீன சுற்றுலாப்பயணிகள் குவிவதால், ஐரோப்பிய சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் ஐரோப்பியர்களுக்கு மட்டும் உதவித் தொகை வழங்கும் திட்டம் ஒன்று வர இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் ஒரே நேரத்தில் சுமார் 12,000 சீன சுற்றுலாப்பயணிகள் சுவிட்சர்லாந்தில் குவிந்தனர்.

பிரபல அமெரிக்க நிறுவனம் ஒன்றில் பணி புரியும் இந்த சீனர்கள், தங்களுக்கு கொடுக்கப்பட்ட விற்பனை இலக்கை தாண்டியதையடுத்து, அவர்களுக்கு சுவிட்சர்லாந்து செல்வதற்கான செலவுகளை அந்த நிறுவனமே ஸ்பான்சர் செய்தது. இதனால் எங்கு பார்த்தாலும் சீனத்தலைகளாகவே தெரிந்தன.

இது போதாதென்று சமீபத்தில் இந்திய கோடீஸ்வரர் ஒருவர் தனது மகனின் திருமண பார்ட்டியை வேறு, மிக ஆடம்பரமாக கொண்டாட, அது ஐரோப்பியர்களின் கண்ணை உறுத்தியது.

பல மேற்கத்திய நாடுகளைப்போலவே, தற்போது சுவிட்சர்லாந்திலும் ஆசியர்கள் மீதான சகிப்பின்மை மெல்ல பரவத் தொடங்கியுள்ளதை அவர்களது விமர்சனங்களிலிருந்து உணர முடிகிறது.

இதே நேரத்தில் சுவிட்சர்லாந்துக்கு வரும் ஜேர்மானியர்களின் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி காணப்படுகிறது.

ஐரோப்பியர்களின் எண்ணிக்கை குறைந்து ஆசியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, ஐரோப்பாவிலிருந்து சுற்றுலா வரும் சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதற்காக அவர்களுக்கு உதவித் தொகைகள் வழங்கும் முயற்சிகளில் அரசியல் வட்டாரத்திலுள்ளவர்கள் இறங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதிக ஐரோப்பிய சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதற்காக மாபெரும் மார்க்கெட்டிங் பிரச்சாரம் ஒன்றை முன்வைக்க இருப்பதாக சுவிட்சர்லாந்து சுற்றுலாத்துறை வெளிப்படையாகவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்