சவுதி இளவரசரிடம் பல கோடி பணத்தை இழந்த சுவிஸ் தொழிலதிபர்: அம்பலமான பின்னணி

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சவுதி இளவரசர் என கூறி அமெரிக்க நாட்டவர் ஒருவர் சுவிஸ் தொழிலதிபரிடம் இருந்து பல கோடி ஏமாற்றிய சம்பவத்தின் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் Zug மண்டலத்தை சேர்ந்த 60 வயது தொழிலதிபரே, சவுதி இளவரசர் என கூறி அறிமுகமான அமெரிக்க நாட்டவரிடம் 5 மில்லியன் டொலர் ஏமாந்தவர்.

மட்டுமின்றி தமது குடும்ப சொத்தின் பெரும்பகுதியையும் இந்த விவகாரத்தில் இழந்ததாக தெரியவந்துள்ளது.

சுவிட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவந்த பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் அந்த தொழிலதிபர்.

குறித்த நிறுவனத்தில் இருந்து வெளியேறிய பின்னர், அந்த தொழிலதிபர் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை ஒன்றை தேடி வந்துள்ளார்.

அப்போது லண்டனை சேர்ந்த வங்கி முதலீட்டாளர் ஒருவர் இவருக்கு அந்த அமெரிக்கரை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அவர் இவரிடம் சவுதி இளவரசர் என்றே அறிமுகமாகியுள்ளார். 2016 ஆம் ஆண்டு முதன் முறையாக தொலைபேசி மூலம் பேசிக்கொண்ட இருவரும், அதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள மியாமி நகரில் வைத்து நெரிடையாக சந்தித்துள்ளனர்.

அந்த சந்திப்பில் சுவிஸ் தொழிலதிபர் இளவரசர் என அறிமுகமான அமெரிக்கரின் ஆடம்பரமான குடியிருப்புகள் மற்றும் விலை உயர்ந்த கார்களின் வரிசைகளை பார்த்து அசந்துள்ளார்.

இதனை அடுத்து, அந்த சவுதி இளவரசரின் நிறுவனங்களில் சுவிஸ் தொழிலதிபர் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டுள்ளார்.

சவுதி இளவரசர் என்பவர் அளித்த ஆவணங்கள் அனைத்திலும் சுவிஸ் தொழிலதிபர் கையொப்பமிட்டு வழங்கியுள்ளார்.

மேலும், அந்த சவுதி இளவரசாரால் அவரது ஐரோப்பிய நிறுவனங்களின் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் இவரிடம் வைத்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாளேடு ஒன்றில் அந்த சவுதி இளவரசர் தொடர்பில் செய்தி ஒன்று வெளியானது கண்டு சுவிஸ் தொழிலதிபர் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

இதனிடையே சுவிஸ் தொழிலதிபர் சுமார் 5 மில்லியன் டொலர்கள் வரை அந்த போலி இளவரசரின் நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தார்.

அவர் சுவிஸ் தொழிலதிபரிடம் காண்பித்த அனைத்து ஆவணங்களும் போலி என பின்னர் நடந்த விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கு விசாரணை கடந்த மே மாதம் முடிவுக்கு வந்த நிலையில், அந்த 49 வயது அமெரிக்கருக்கு 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த போலி இளவரசர் சுவிஸ் தொழிலதிபரை மட்டுமின்றி அமெரிக்கா, கனடா, பிரித்தானியா மற்றும் ஹாங்காங் நாட்டவர்கள் சிலரையும் ஏமாற்றியுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...