சுவிட்சர்லாந்தில் ஆற்றில் இறந்து மிதந்த நூற்றுக்கணக்கான மீன்களால் பரபரப்பு!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

உலகமே வெப்பம் குறித்து கவலை கொண்டிருக்கும் நேரத்தில் சுவிட்சர்லாந்திலுள்ள ஆறு ஒன்றில் மீன்கள் இறந்து மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சுவிட்சர்லாந்திலுள்ள Appenzell நகரில் உள்ள ஆறு ஒன்றில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இறந்த மீன்கள் சால்மன் வகை மீன்களுக்கு நெருங்கிய இனமான trout வகை மீன்கள் ஆகும்.

பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் வெப்பம் தகித்துக்கொண்டிருக்க, அனைவருமே முதலில் மீன்களின் உயிரிழப்புக்கு காரணம் வெப்பம்தான் என எண்ண, ஆனால் இந்த குறிப்பிட்ட ஆற்றில் மீன்களின் இறப்புக்கு காரணம் மாசு என்று விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர்.

நதியின் கரையோரம், 2 கிலோமீற்றர் தொலைவுக்கு மீன்கள் இறந்து கிடந்ததை மீனவர் ஒருவர் கண்டதையடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்