சுவிட்சர்லாந்தில் படகில் சென்று ஐஸ் கிரீம் விற்கும் ஒரு செல்வந்தர்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் பெரும் வசதி படைத்த, நிலச்சுவான்தார் ஒருவரின் மகன் படகில் சென்று ஐஸ் கிரீம் விற்று வருகிறார்.

பேராசையோ அல்லது பணப்பிரச்சினையோ அதற்கு காரணம் அல்ல! Van Sprundel, தான் வாழ்ந்து வரும் Klöntal பள்ளத்தாக்கு மற்றும் அதிலுள்ள ஏரி ஆகியவற்றை தான் மிகவும் நேசிப்பதாலேயே அவ்விதம் செய்வதாக அவர் கூறுகிறார்.

ஒரு நாளில் ஒரு முறையாவது தான் வாழும் இடத்தைச் சுற்றிப்பார்க்கச் செல்லும் Sprundel, அப்படி செல்ல முடியாதபோது தனது வெப்கேம் மூலமாகவாவது தனது மனம் கவர்ந்த இடங்களைப் பார்வையிட்டு விடுகிறார்.

மிகப்பெரிய நிலச்சுவான்தார் ஒருவரின் மகனாகிய Sprundel, தகவல் தொழில் நுட்பம் மீதான ஆர்வம் காரணமாக, அதைக் கற்றதோடு, சுவிட்சர்லாந்திலேயே சொந்தமாக இணையதளம் உடைய முதல் நிறுவனம் என்ற பெயரை தனது பெற்றோரின் மதுபான விடுதிக்கு வாங்கிக் கொடுத்தார்.

பின்னர் தகவல் தொழில் நுட்பம் கற்றுக்கொடுக்கும் ஒரு நிறுவனத்தை உருவாக்கி பல நிபுணர்களை உருவாக்கினார்.

இத்தனைக்கும் பின்பு தனது வாழிடத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விப்பதற்காக, தனது குட்டிப்பெண் லாராவுடன் படகில் சென்று ஐஸ் கிரீம் விற்று வருகிறார் இந்த செல்வந்தர்.

சில நேரங்களில் நாங்கள் விற்கும் ஐஸ் கிரீமை விட அதிகம் ஐஸ் கிரீமை லாராவே சாப்பிட்டு விடுகிறாள் என்று கூறும் Sprundel, ஒரு கட்டத்தில் அவளுக்கு அது சலித்துவிடும் என்று நம்புகிறேன் என்கிறார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers