கைதிகளுக்கு ஒரு தனி அறை: சுவிஸ் நிர்வாகம் ஒப்புதல்... எதற்கானது தெரியுமா?

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் Mosnang நகரில் செயல்பட்டுவரும் சிறப்பு சிறையில் உள்ள கைதிகளுக்கு பாலியல் உறவு வைத்துக் கொள்ள தனி அறை ஒதுக்கப்படும் நடவடிக்கை தாமதாமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Mosnang அருகே அமைந்துள்ள இந்த சிறையில் மொத்தம் 16 கைதிகள் தற்போது உள்ளனர். இதில் கொலை, கற்பழிப்பு, மோசடி உள்ளிட்ட பல குற்றவாளிகள் உள்ளனர்.

இங்குள்ள குற்றவாளிகள் 16 பேருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் தனித்தனியாக விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இங்குள்ள கைதிகள் சிறை நிர்வாகத்திற்கு ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

அதில், சிறை தண்டனை அனுபவித்துவரும் தங்களுக்கு பாலியல் உறவு வைத்துக் கொள்ள தனி அறை ஒதுக்க வேண்டும் என்பதே.

கைதிகளின் இந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளும் வகையில் இருப்பதாக கூறிய நிர்வாகம், கைதிகள் என்றாலும் பாலியல் உறவை அவர்களுக்கு மறுப்பது உகந்தது அல்ல எனவும் முடிவு செய்தது.

ஆனால் அதற்காக பாலியல் தொழிலாளர்களை சிறைக்குள் அனுமதிக்க முடியாது என கண்டிப்பாக தெரிவித்துள்ள நிர்வாகம்,

சிறையில் தங்களுடன் இருக்கும் சக கைதிகளின் ஒப்புதலுடன், பாலியல் உறவு வைத்துக் கொள்ளலாம் என அனுமதி வழங்கியுள்ளது.

கைதிகளின் பாலியல் உறவுக்கு ஒப்புதல் அளித்தது மட்டுமின்றி, அவர்களுக்காக தனி அறை ஒன்றையும் கட்டி எழுப்ப சிறை நிர்வாகம் முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளில் களமிறங்கியது.

இந்த கட்டிடமானது எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டுக்கு வரும் என கூறும் அதிகாரிகள், பொருளாதார சிக்கல் மற்றும் உரிய அனுமதி பெறும் நடவடிக்கைகளால் கால தாமதம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

பாலியல் உறவுக்காக ஒதுக்கப்படும் அந்த அறைகளில், அவர்களின் குடும்பங்களையும் பிள்ளைகளையும் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும், வெறும் பாலியல் உறவுக்கான அறையாக அது இருக்காது எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers