சுவிஸ் தேவாலயத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பாஸல் தேவாலயத்தின் கீழே தொல்பொருள் ஆய்வாளர்களால் கொத்துக் கொத்தாக எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த எலும்புக் கூடுகளானது இரண்டு செங்கல் கல்லறைகளில் பதப்படுத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

அநேகமாக இடைக்காலத்தின் பிற்பகுதியில் இந்த கல்லறைகள் நிறுவப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மொத்தம் 10 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவை பாஸல் பகுதிகளில் குடியிருந்த மேட்டுகுடி மக்களின் கல்லறையாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

குறித்த தேவாலயமானது 1274 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து பாஸல் பகுதியில் பிரபலமான தேவலயமாக உருமாறியதுடன், பொருளாதாரத்தில் உச்சத்தையும் தொட்டுள்ளது.

இதனையடுத்து 1529 ஆம் ஆண்டு முதன் முறையாக புதுப்பிக்கப்பட்டது. மேலும், 1860 ஆம் ஆண்டு தேவாலயம் விடுத்து, அதன் சுற்றும் எழுப்பப்பட்டிருந்த கட்டிடங்கள் அனைத்தும் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers