காதலனுடன் சென்ற மனைவியைக் கொல்வதற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற கணவன்: ஆனால் நடந்தது?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் தன்னை விட்டுச் சென்று புதிதாக தேடிக் கொண்ட காதலனுடன் தனது மனைவியைக் கண்ட ஒருவர், அவளை கொலை செய்ய உதவினால் ஏராளமான பணமும் ஒரு காரும் தருவதாகக் கூறி ஒரு சக ஊழியரை அணுகியுள்ளார்.

அந்த நபரை விட்டுப் பிரிந்து சென்ற அவரது மனைவி வேறொருவருடன் பழகுவதாக அவருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் ஒரு நாள் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் தனது புது காதலனுடன் இருந்த தனது மனைவியைக் கண்ட அந்த நபருக்கு ஆத்திரம் ஏற்பட்டிருக்கிறது.

அவளை Rossens அணையிலிருந்து தள்ளி விட்டு கொலை செய்து விட்டு, அதை தற்கொலை போல் ஜோடிக்க முடிவு செய்திருக்கிறார்.

ஆனால் அதை தனியாக செய்ய முடியாது என்பதால், தன்னுடன் பணியாற்றும் ஒருவரது உதவியை நாடியுள்ளார் அவர்.

தனது மனைவியை அணையிலிருந்து தள்ளிவிட உதவினால் 10,000 சுவிஸ் ஃப்ராங்குகளும், mini-cooper கார் ஒன்றும் தருவதாக கூறியுள்ளார் அவர்.

ஆனால் அந்த சக ஊழியர் அவருக்கு சம்மதிக்காததோடு பொலிசாரிடம் புகாரும் அளித்திருக்கிறார்.

மனைவியை கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குமாறு வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டுள்ள நிலையில், வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்