சுவிற்சர்லாந்தில் பாதுகாப்பில்லாமல் மனைவியுடன் சுற்றித்திரியும் தாய்லாந்து மன்னர்

Report Print Vijay Amburore in சுவிற்சர்லாந்து

முடிசூட்டப்பட்ட சில வாரங்களில் தாய்லாந்து மன்னர் தன்னுடைய மனைவியுடன் சுவிற்சர்லாந்தில் சுற்றித்திரியும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் மன்னராக முடிசூட்டப்பட்ட ராமா ​​எக்ஸ் என்று அழைக்கப்படும் தாய்லாந்து மன்னர் மஹா வஜிரலோங்க்கார்ன், லூசெர்னுக்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டலுக்கு வெளியே தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஹோட்டலில் இருந்து ஒரு நபரால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம், சுவிற்சர்லாந்து ஊடகங்களில் பரவி வருகிறது.

அவர்கள் அணிந்திருக்கும் ஆடை மற்றும் உடலில் குத்தியிருக்கும் பச்சை பற்றி கருத்துக்கள் வெளிவர துவங்கியுள்ளன.

இதற்கு தாய்லாந்து அதிகாரிங்கள் கடும் கண்டனம் தெரிவித்திருப்பதுடன், அவர்கள் மீது நடவடிக்கைக்கு எடுக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

தாய்லாந்தின் கிரிமினல் கோட் பிரிவு 112 கூற்றுப்படி, மன்னர் மற்றும் மன்னரின் வாரிசுகளை அவமதிக்கும் எவருக்கும், ஒவ்வொரு குற்றத்திற்கும் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புண்டு.

புகைப்படங்கள் குறித்து பேசியுள்ளார் சுவிற்சர்லாந்து பொலிஸார், அரச தம்பதியினர் வருகை குறித்து தங்களுக்கு தெரியப்படுத்தவில்லை என கூறியுள்ளனர். அதேசமயம் அரச தம்பதிகள் இன்னும் சுவிற்சர்லாந்தில் வசிக்கிறார்களா அல்லது வெளியேறிவிட்டார்களா என்பது குறித்து, மன்னர் தங்கியிருக்கும் ஹோட்டல் நிர்வாகம் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்