ஒரே ஒரு காரணம்: சுவிஸில் மனைவி மற்றும் மகனை கொலை செய்த வெளிநாட்டவர்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் வோட் மண்டலத்தில் பெல்ஜியம் குடும்பம் ஒன்று சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் மர்மம் நீடிப்பதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வோட் மண்டலத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து திங்களன்று பொலிசார் மூன்று சடலங்களை மீட்டுள்ளனர்.

இதில் 40 வயதான மைக்கேல், அவரது மனைவி ஆக்னஸ் மற்றும் 13 வயதான மகன் ரியான் ஆகியோரின் சடலங்கள் என பொலிசார் உறுதி செய்தனர்.

இந்த நிலையில், மைக்கேல் தமது மனைவி மற்றும் மகனை கொலை செய்துவிட்டு தாம் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் மைக்கேல் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றும் சிக்கியுள்ளதால், இது திட்டமிட்ட சம்பவம் எனவும் பொலிசார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மட்டுமின்றி குடியிருப்பின் தரை தளத்தில் மைக்கேலின் சடலமும், மேல் மாடியில் ஆக்னஸ் மற்றும் மகன் ரியானின் சடலங்களும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

மைக்கேல் மருந்து தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். மட்டுமின்றி, அவருக்கு இந்த வேலையில் விருப்பம் இல்லை எனவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மீட்கப்பட்ட சடலங்களில் போதை மருந்து பயன்பாடு கண்டறியப்பட்டதாகவும், உடற்கூறு ஆய்வு முடிவடைந்த பின்னரே விரிவான தகவல் வெளிவரும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்