குறைந்த IQ காரணமாக நாடு கடத்தப்படுவதிலிருந்து தப்பிய நபர்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

Kosovo நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு குறைந்த IQ இருப்பதால் அவர் நாடுகடத்தப்படுவதிலிருந்து தப்பியுள்ளார்.

தனது 17ஆவது வயதில் சுவிட்சர்லாந்துக்கு வந்த அந்த நபர், பல சட்ட மீறல்களில் ஈடுபட்டார்.

சமீபத்தில் கூட, ஒருவரை தாக்கியதற்காக அவருக்கு இரண்டாண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து அவரை நாடு கடத்த பேசல் கேண்டன் முடிவு செய்தது.

ஆனால் ஃபெடரல் நீதிமன்றம் அவரது மூளைத்திறன் ஒரு 9 முதல் 12 வயது வரையுள்ள சிறுவனின் அளவில் மட்டுமே இருப்பதாக கண்டறிந்ததோடு, அவரால் தன்னையே கவனித்துக் கொள்ள முடியாது என்பதையும் கண்டறிந்தது.

அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், அவர்களில் ஒரு குழந்தைக்கு இதயத்தில் பிரச்சினை உள்ளதும் தெரியவந்துள்ளது.

ஒரு புதிய நாட்டுக்கு அனுப்பப்பட்டால் அவரால் அங்கு சென்று ஒரு புதிய வாழ்வை தொடங்க இயலாது என்று தெரிவித்துள்ள நீதிமன்றம் அவரை நாடு கடத்துவதை தடுத்து நிறுத்திவிட்டது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்