சுவிட்சர்லாந்தில் அரசு உதவி பெறும் ஐ.எஸ் ஆதரவாளர்கள்: ஆய்வில் வெளியான தகவல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
341Shares

சுவிட்சர்லாந்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிள் மொத்தம் 130 ஐ.எஸ் ஆதரவாளர்கள் குடியிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் சரிபாதி எண்ணிக்கையிலானோர் அரசின் உதவிகளை பெற்று வருவதாகவும் குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் ஐ.எஸ் ஆதரவாளர்கள் என இனம்காணப்பட்டவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள் எனவும், அதில் குறிப்பாக அதிக படிப்பறிவு இல்லாதவர்கள் எனவும், பொதுவாக பணி நிரந்தரமற்றவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இதில் சிலருக்கு சமூக மற்றும் உளவியல் சிக்கல்கள் இருந்தன எனவும் பலர் ஏற்கெனவே குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் எனவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும், ஐ.எஸ் ஆதரவாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் பெரும்பாலும் ஜெனீவா பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

மட்டுமின்றி ஐ.எஸ் அமைப்பில் இணைந்து செயல்படும் பொருட்டு சிரியா மற்றும் ஈராக் நாடுகளுக்கு பயணமான ஜேர்மானியர்கள் அளவுக்கு சுவிட்சர்லாந்தில் இருந்தும் இளைஞர்கள் சென்றுள்ளனர்.

மேலும் சுவிஸ் மற்றும் ஜேர்மனியைவிடவும் பிரான்ஸ், பெல்ஜியம் அல்லது ஆஸ்திரியா நாடுகளில் இருந்து ஐ.எஸ் அமைப்பில் இணைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என இந்த ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்