அகதிகள் நலனுக்காக சுவிட்சர்லாந்து எடுத்துள்ள நல்ல முடிவு!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் மேலாணையர் அலுவலகத்திற்கு 125 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளை அளிப்பதாக சுவிஸ் ஃபெடரல் கவுன்சில் வாக்களித்துள்ளது.

ஜெனீவாவிலிருக்கும், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் மேலாணையர் அலுவலகத்திற்கு (UNHCR), 2019–2022 கால கட்டத்திற்காக இந்த தொகையை சுவிஸ் ஃபெடரல் கவுன்சில் வாக்களித்துள்ளது.

2017இல் மியான்மரிலிருந்து பங்களாதேஷுக்கு 900,000 அகதிகள் இடம்பெயர்ந்தது போன்ற பெரிய புலம்பெயர்தல்களுக்கு விரைந்து உதவுவதை சாத்தியப்படுத்தும் வகையில் இந்த நிதி உதவி செய்யப்பட்டுள்ளது என்று சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டு UNHCRஇன் உதவி மற்றும் பாதுகாப்பு திட்டங்களால் உலகம் முழுவதிலும் 21 மில்லியன் மக்கள் பயன்பெற்றுள்ளார்கள்.

8.5 மில்லியன் பேருக்கு குடிநீர் வசதி செய்து தரப்பட்டதோடு, 1.8 மில்லியன் அகதி சிறுவர்கள் பள்ளி செல்வதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன என்று சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2011இலிருந்து சுவிட்சர்லாந்து UNHCRக்கு சிரியா நாட்டு போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக 42 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்