ஆபத்தான நிலையிலிருந்த இளைஞரின் உயிரை காப்பாற்றிய பொலிஸ் நாய்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் Zug ஏரியில், ஆபத்தான நிலைமையிலிருந்த இளைஞர் ஒருவரை பொலிஸ் நாய் ஒன்று காப்பாற்றியுள்ளது.

நேற்று காலை பொலிஸ் அதிகாரி ஒருவர் Zug ஏரிக்கரை வழியாக தனது பொலிஸ் நாயுடன் நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது அந்த நாய் அவரை ஏரியை நோக்கி இழுத்துக் கொண்டு ஓடியிருக்கிறது. அதை பின்பற்றி சென்ற அந்த பொலிஸ் அதிகாரி, ஏரிக்கரையைப் பற்றியபடி இருந்த இரண்டு கைகளை பார்த்திருக்கிறார்.

ஓடிச்சென்று பார்க்கும்போது, இடுப்பளவு நீரில் சுவரைப் பிடித்தபடி ஒரு 17 வயது இளைஞன் நிற்பதை அவர் கண்டிருக்கிறார்.

உடனடியாக சிலரை உதவிக்கு அழைத்து அந்த இளைஞனை கரைக்கு கொண்டு வந்திருக்கிறார் அவர்.

வீட்டுக்கு செல்லும் வழியில், சற்று நீந்திவிட்டு செல்லலாம் என்று எண்ணி தண்ணீரில் இறங்கியதாக தெரிவித்த அந்த இளைஞர், hypothermia என்னும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அந்த இளைஞரைக் காப்பற்றியதற்காக, Wyk என்ற பெயரையுடைய அந்த பொலிஸ் நாய்க்கு, ஒரு முழு பாக்கெட் சாஸேஜ் பரிசாக கொடுக்கப்பட்டது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers