ஒரே ஒரு நடவடிக்கை.. மூன்றே ஆண்டுகளில் தலைகீழாக மாறிய சுவிஸ்: சட்டமே வேண்டாம்

Report Print Basu in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு எதிர்பார்த்ததை விட மிக விரைவில், அதிகளவில் குறைந்துள்ளதாக சுவிஸ் சில்லறை வர்த்தக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு, சுவிட்சர்லாந்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக, சுவிஸ் சில்லறை வர்த்தக கூட்டமைப்பு, பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை குறைக்க, தன்னார்வ நடவடிக்கையாக நாட்டில் உள்ள அனைத்து சூப்பர் மார்க்கெட்டுகள் உட்பட அங்காடிகளில் பிளாஸ்டிக் பைகளின் விலையை 5 சதவிகிதம் உயர்த்தியது.

இதன் மூலம் 2025 ஆம் ஆண்டு நாட்டில் பிளாஸ்டிக் பயன்பாடு 70 சதவீதம் வரை குறையும் என நம்பிக்கை தெரிவித்திருந்தது. ஆனால், தன்னார்வ நடவடிக்கையால் தற்போதே நாட்டில் 86 சதவிகிதம் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு குறைந்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த நடவடிக்கை மூலம் நல்ல மாற்றம் ஏற்பட்டு வருவதால், நாடாளுமன்றத்தில் இது தொடர்பான சட்டம் கொண்டு வர தேவையில்லை என சுவிஸ் சில்லறை வார்த்தக கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்