சுவிஸ் கேபிள் கார் பராமரிப்பு பணியின்போது விபத்து: ஒருவர் பலி, ஆறு பேர் காயம்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிஸ் ரிசார்ட் ஒன்றில், கேபிள் கார் பராமரிப்பு பணியின்போது ஏற்பட்ட விபத்தில், ஒருவர் பலியானதோடு, ஆறு பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1,300 மீற்றர் உயரத்தில் அமைந்திருக்கும் கேபிள்களில் பிரச்சினை ஏற்பட்டதையடுத்து, அதை சரி செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருக்கும்போது இரண்டு கேபிள்கள் பணியாளர்கள் மீது மோதியுள்ளன.

இதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார்.

காயமடைந்தவர்கள் ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அந்த கேபிள் Engelberg கிராமத்தையும், சுவிஸ் மலைப்பகுதியான Titlis பகுதியில் அமைந்துள்ள ஒரு ஏரியையும் இணைக்கிறது.

சம்பவம் நடந்தபோது கேபிள் கார் பயன்பாட்டில் இல்லாததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

சுற்றுலாப்பயணிகள் யாருக்கும் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. காயமடைந்த பணியாளர்களின் நிலைமை குறித்து அதிகாரிகள் தகவல் எதுவும் வெளியிடவில்லை.

எதனால் விபத்து ஏற்பட்டது என்பதை அறிவதற்காக சூரிச்சிலிருந்து தடயவியல் நிபுணர்கள் களமிறக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்