ஹெல்ப்..ஹெல்ப் சுவிஸில் தொடரும் மர்மம்: திணறும் பொலிஸ்

Report Print Basu in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் ஹெல்ப், ஹெல்ப் என்ற மர்ம குரலை கேட்டு வழிப்போக்கர்கள் பீதியடைந்து பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

ரோன் மற்றும் அர்வ் நதிகள் சேரும் ஜொங்க்ஷன்,ஜெனீவே பகுதியிலே இந்த மர்ம சம்பவம் நடந்துள்ளது. நதியின் ஓரத்தில் சென்றுக்கொண்டிருந்த வழிப்போக்கர்கள், ஹெல்ப்..ஹெல்ப் என்ற குரலை கேட்டு நதியிலும், சுற்றும் முற்றும் தேடியுள்ளனர்.

எனினும், குரல் தொடர்ந்து ஒலித்ததால் பீதியடைந்த வழிப்போக்கர்கள் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து சம்பவயிடத்திற்கு தீயணைப்பு அதிகாரிகள் விரைந்துள்ளனர். அவர்களுக்கும் ஹெல்ப், ஹெல்ப் என்ற குரல் கேட்டுள்ளது.

இதனையடுத்து, கமெராக்கள் கொண்ட இரண்டு ஹெலிகாப்டர்கள், மேப்ப நாய்கள், பொலிஸ் அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியை சுற்றியுள்ள குகைகளிலும் தேடியுள்ளனர்.

எனினும், கடைசி வரை அவர்கள் எதையும் கண்டுபிடிக்க முடியாததால் அதிகாரிகள் அதிர்ச்சிடைந்துள்ளனர். சம்பவம் குறித்து பேசிய பொலிஸ் அதிகாரி இந்த குரல் ஒரு மர்மமாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்