தீவிரவாதம் தொடர்பில் சுவிட்சர்லாந்து முன்வைத்துள்ள புதிய திட்டம்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிஸ் அரசாங்கம் தீவிரவாதத்தை தடுக்கும் முயற்சியாக, சிறுவர்கள் உட்பட சந்தேகத்துக்குரிய நபர்கள் அதிகாரிகளிடம் தங்களை பதிவு செய்வதை கட்டாயமாக்குவதோடு, வீட்டுக் காவலில் வைப்பது வரையிலான பல திட்டங்களை முன்வைத்துள்ளது.

2017ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட தீவிரவாத எதிர்ப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த புதிய நடைமுறைகள் நாடாளுமன்றத்தின் ஒப்புகையை எதிர்நோக்கியிருக்கின்றன.

சமீப காலமாக சுவிட்சர்லாந்தில் தீவிரவாத தாக்குதல்கள் குறிப்பிடத்தக்க அளவில் இல்லையென்றாலும், ஜிகாத் கண்காணிப்பு திட்டம் ஒன்றின்கீழ் அரசு நூற்றுக்கணக்கான சந்தேகத்துக்குரிய நபர்களை கண்காணித்து வருகிறது.

இந்நிலையில் இந்த புதிய திட்டங்களால் சந்தேகத்துக்குரிய நபர்கள் தங்கள் வசிப்பிடம் குறித்தும் தாங்கள் எங்கு செல்கிறோம் என்பது குறித்தும் பொலிஸ் நிலையங்களுக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கும்.

அவர்களது பாஸ்போர்ட்கள் கைப்பற்றப்படுவதோடு, யாரையும் சந்திக்க முடியாத நிலைக்கு ஆளாகலாம்.

இவர்களால் அச்சுறுத்தல் ஏற்படலாம் என சந்தேகிக்கப்படும் நபர்கள் சிறையிலடைக்கப்படுவதோடு, மின்னணு உபகரணங்கள் மூலம் கண்காணிக்கப்படவும் செய்யலாம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, கடைசி நடவடிக்கையாக அவர்கள் வீட்டுக்காவலிலும் வைக்கப்படலாம், ஆனால் அதற்கு சுவிஸ் ஃபெடரல் பொலிசார் மற்றும் நீதிமன்றத்தின் ஒப்புதல் வேண்டும்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்