இலங்கையில் அசாதாரண சூழல்: சுவிஸ் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட எச்சரிக்கை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

தவிர்க்க முடியாத காரணங்களால் மட்டுமின்றி சுவிஸ் குடிமக்கள் எவரும் இலங்கைக்கு செல்ல வேண்டாம் என சுவிஸ் வெளிவிவகார அமைச்சு எச்சரித்துள்ளது.

ஈஸ்டர் நாளன்று ஐ.எஸ் பயங்கரவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட கொலைவெறி தாக்குதலில் 250-கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து சுவிஸ் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள எச்சரிக்கை தகவலில், அங்குள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குழப்பம் வாய்ந்ததாக உள்ளது எனவும், இதன் பரிணாமம் நிச்சயமற்றதாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

அங்குள்ள அசாதாரண சூழல் கட்டுக்குள் கொண்டுவரப்படும் வரையில் சுவிஸ் குடிமக்கள் இலங்கை பயணங்களை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதனிடையே சுவிட்சர்லாந்தில் இருந்து மே 31 ஆம் திகதி வரை இலங்கைக்கு செல்ல முன்பதிவு செய்யப்பட்டிருந்த அனைத்து பயண திட்டங்களையும் தனியார் நிறுவனம் ஒன்று ரத்து செய்துள்ளது.

மட்டுமின்றி அடுத்த அறிவிப்பு வெளியாகும்வரை எந்த முன்பதிவும் ஏற்பதில்லை எனவும் அறிவித்துள்ளது.

இதனிடையே, சுவிஸ் விசாரணை அதிகாரிகள் இருவரை இலங்கைக்கு உதவ அனுப்பிவைக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...