சுவிஸ் சாலையில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்பு: விளக்கமளித்த அதிகாரிகள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் பெண் ஒருவர் மனித எலும்பு ஒன்றை சாலை ஓரத்தில் கண்டெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெர்ன் மண்டலத்தில் Monbijou மற்றும் Schwarztorstrasse பகுதிகளுக்கு இடையே குறித்த மனித எலும்பை பெண் ஒருவர் கண்டெடுத்துள்ளார்.

உடனடியாக பொலிசாருக்கும் அவர் தகவல் அளித்துள்ளார். இதனிடையே மருத்துவ நிபுணர் ஒருவர், கண்டெடுக்கப்பட்ட எலும்பானது, ஆண் ஒருவரின் தொடை எலும்பு என உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், அந்த எலும்பு கண்டெடுக்கப்பட்ட இடத்தில் ஒரு துண்டு துணியும் கிடந்துள்ளது.

அதுவே அந்த பெண்மணியை கலவரத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே தகவல் அறிந்து விரைந்து வந்த மண்டல பொலிசார்,

அந்த எலும்பு தொடர்பில் மேலதிக தகவல் ஏதும் கிடைக்காமல் தடுமாறினர்.

இந்த நிலையில் பெர்ன் மண்டலத்தின் தொல்பொருள் பிரிவு பொலிசார் முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளனர்.

அதில், Monbijou பகுதியில் 19 ஆம் நூற்றாண்டில் இருந்தே மிகப்பெரிய கல்லறைத் தோட்டம் ஒன்று அமைந்திருந்ததாகவும்,

1897 ஆம் ஆண்டுவரை பெர்ன் மண்டல மக்கள் இந்த கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டு வந்ததாகவும்

காலப்போக்கில் அந்த கல்லறைத் தோட்டம் மூடப்பட்டு, அதன் மீது கட்டிடங்கள் எழுப்பப்பட்டது என தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி, கட்டிடப்பணி நடைபெறும்போது மண்டை ஓடுகளும் எலும்புக்கூடுகளும் வெளியே வருவதுண்டு என குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும், தற்போது கண்டெடுக்கப்பட்ட எலும்புடன் காணப்பட்ட துணி தொடர்பில் விசாரிக்கப்படும் என மண்டல பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்